Tuesday 14th of July 2026

English Tamil
Advertiesment


கடும் கட்டுப்பாடுகளுடன் IPL போட்டிகள்: புதிய சட்டங்கள் இதோ


2020-07-31 14991

எதிர்வரும் செப்டம்பர் முதல் நவம்பர் வரை ஐ.பி.எல் போட்டிகள் ஐக்கிய அரபு இராஜியத்தில் நடத்தப்படவுள்ளன.

இந்தப் போட்டிகளில் கடைபிடிக்கப்பட வேண்டிய புதிய சட்டதிட்டங்கள் குறித்த அறிக்கையை நேற்றைய தினத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தளம் வெளியிட்டிருக்கின்றது.

போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட வீரர்கள் அனைவரும் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

இதுதவிர அனைத்து வீரர்களும் 04 தடவைகள் கொரோனா பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்படவுள்ளனர்.

கிரிக்கெட் விவபரனம் செய்யும் அறையில் வர்ணனையாளர்கள் 06 அடி தூர சமூக இடைவெளியை பேணும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் போட்டிகளின் முடிவில் பரிசுகள் அளிக்கப்படும்போதும் சமூக இடைவெளி பேணப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இம்முறை ஐ.பி.எல் போட்டிகளைப் பார்வையிட பார்வையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertiesment